வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ள படம் ‘வாடிவாசல்’.
இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜுலை 23ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு போலியான டிவிட்டர் கணக்கிலிருந்து இப்படம் பற்றிய தவறான தகவல் ஒன்று வெளிவந்தது.
அது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன்இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும்…” எனத் தெரிவித்துள்ளார்.
படம் பற்றிய அப்டேட்டை எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு தயாரிப்பாளரின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வெற்றிமாறன், சூர்யா முதல் முறையாக இணையும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.