கேவிஎன் புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, டாரா சுடாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாக்சிக்’
இன்று படத்தின் கதாநாயகன் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரமான ‘ராயா’வை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான ஒரு வீடியோ முன்னோட்டத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.
ஹாலிவுட் படம் போன்ற படமாக்கம், காட்சிகள், ஆகியவற்றுடன் ‘எரோட்டிக் மற்றும் ஆக்ஷன்’ கலந்த ஒரு வீடியோவாக அது இடம் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஒரு பெண் இயக்குனர் அப்படிப்பட்ட ஒரு வீடியோவைப் படமாக்கினாரா என சமூக வலைத்தளங்களிலும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த வீடியோ வெளியாக சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ளதால் போகப் போக இன்னும் பல விவாதங்களை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து இன்னும் கூடிக் கொண்டே போகிறது.