விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி ‘மிஸஸ் சின்னத்திரை’

விஜய் டிவியில் முற்றிலும் ஒரு புதிய நிகழ்ச்சியாக ‘மிஸஸ் சின்னத்திரை’ என்ற நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

இதுவரையில் சின்னத்திரை நடிகைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிக அழகாக செய்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திரைக்குப் பின்னால் அவர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை இந்த புது நிகழ்ச்சி நம் மக்களுக்கு காட்டவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 9 சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நம் கதாநாயகிகளின் திறமையையும், மன உறுதியையும் வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை நிஷா கணேஷ், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ புகழ் வனிதா ஹரிஹரன், நடிகை வந்தனா, நடிகை ஸ்ரீ வித்யா, நடிகை ஸ்ரீ துர்கா, ‘பகல் நிலவு’ புகழ் நடிகை சிந்து ஷியாம், ‘கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்’ புகழ் RJ சிந்து, நடிகை சுஜிதா, ‘தெய்வம் தந்த வீடு’ புகழ் நடிகை மோனிகா மற்றும் நடிகை அனு விக்னேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

மேலும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் நேயர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று யார் ‘மிஸஸ் சின்னத்திரை’ டைட்டிலை வெல்லப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நிகழ்ச்சியை வாரந்தோறும் தவறாமல் பாருங்கள்.
இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 24, ஞாயிற்றுக் கிழமை முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

கொடி வீரன் – ஐயோ…அடி..ஆத்தே… – பாடல் வரிகள் வீடியோ

Read Next

இயற்கை விவசாயத்தின் பெருமையைச் சொல்லும் ‘குத்தூசி’

Most Popular