நடன விரும்பிகள் அனைவருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி கிங்ஸ் ஆப் டான்ஸ். இந்த நிகழ்ச்சி பல்வேறு நடனக் கலைஞர்களுக்குத் தங்கள் திறமைகளை எடுத்துக்காட்ட ஒரு சிறந்த மேடையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
ஆமாம், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 7 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.இதில் வயது வரம்பு கிடையாது. எந்த வயதில் உள்ள நடனக் கலைஞர்களும் வந்து கலந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் ஒரு குழுவாகவோ அல்லது தனியாகவோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சிக்கான, சிறந்த நடனக் கலைஞர்களுக்கான தேடல் தமிழ்நாட்டில் மதுரை, கோவை மற்றும் சென்னை போன்ற இடங்களில் ஆடிஷன் நடைப்பெற்றது. அதிலிருந்து சிறந்த நடனத் திறமையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நடனத் திறமையாளர்களை மேலும் மெருகேற்ற இந்நிகழ்ச்சியில் மூன்று கேப்டன்கள் உள்ளனர் .
சாண்டி மாஸ்டர், ஷெரிப் மாஸ்டர் மற்றும் ஜெப்ரி மாஸ்டர் ஆகிய மூவர்தான் கேப்டன்கள். தன் உற்சாக நடனத்தால் அனைவரையும் கவரும் சாண்டி மாஸ்டரை தெரியாதவர்கள் இல்லை. ஷெரிப் மாஸ்டர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடன நிகழ்ச்சியான, ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெப்ரி மாஸ்டர் போடா போடி திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர். சமீபத்தில் வெளியான ப்ரோமோவின் மூலம், மாபெரும் நடன சூறாவளி மாஸ்டர் ராஜு சுந்தரம் அவர்கள் முதன் முறையாக இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராகப் பங்கேற்கிறார். இந்த திறமைப் பட்டாளங்கள் அனைவரும் சேர்ந்து இந்த நடன நிகழ்ச்சியை அடுத்த லெவெலுக்கு எடுத்துச் செல்வார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
‘கலக்கப் போவது யாரு சீசன் 5′ பிரபலம் சதீஷ் மற்றும்’ கலக்கப் போவது யாரு சீசன் 6′ வெற்றியாளர் வினோத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்கள்.