தமன்னா நடிக்கும்….என்பதை ஏற்க மறுக்கும் தமன்னா

தெலுங்கில் 2017ல் வெளிவந்த வெற்றி பெற்ற ‘ஆனந்தோ பிரம்மா’ என்ற படத்தை தமிழில் ‘பெட்ரோமாக்ஸ்’ என்ற பெயரில் தயாரித்து அக்டோபர் 11ம் தேதி வெளியிட உள்ளார்கள்.

‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தமன்னா, யோகி பாபு, காளி வெங்கட், முனிஷ்காந்த், சத்யன், திருச்சி சரவணகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

படத்திற்கான விளம்பரங்களில் ‘தமன்னா நடிக்கும்’ என்றுதான் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால், அதை பெருந்தன்மையுடன் ஏற்க மறுக்கிறார் தமன்னா.

‘‘பெட்ரோமாக்ஸ்’ படத்தோட கதைதான் முதன் முதல்ல என்னை ஈர்த்த ஒரு விஷயம். தெலுங்குல பார்க்கும் போதே இந்தக் கதையை தமிழ் ரசிகர்கள் கண்டிப்பா ரசிப்பாங்கன்னு புரிஞ்சுது.

என்னோட பேரு, படத்தோட விளம்பரங்கள்ல முதல்ல இருக்கிறத என்னால ஏத்துக்க முடியலை. ஏன்னா, இந்தப் படத்துல நடிச்சிருக்கிற நடிகர்கள், மொத்த குழுவினரும் காரணம். அந்த அளவுக்கு ஒவ்வொருத்தரும் ஈடுபாட்டோட நடிச்சிருக்காங்க. நானும் அவங்களை மாதிரி ஒரு பகுதியாதான் இந்தப் படத்துல இருக்கேன்.

‘பாகுபலி, சைரா’ மாதிரி பெரிய படமா கூட இருக்கலாம். நமக்கு என்ன கதாபாத்திரம் கிடைக்குதா அதை நேர்மையா பண்ணணும்னு நினைப்பேன்.

31 நாள்ல ஒரு படத்தை முடிக்கிறது பெரிய விஷயம். படத்தோட இயக்குனர் ரோகினுக்கு இது இரண்டாவது படமா இருந்தாலும் சிறப்பா வேகமா செஞ்சி முடிச்சாரு. நல்ல கதை அமைஞ்சால் திரும்பவும் அவர் படத்துல நடிப்பேன்.

தமிழ் சினிமாவுல நிறைய ஹாரர் காமெடி இதுக்கு முன்னாடி வந்திருக்கு. இந்தப் படம் பண்ணலாமான்னு முதல்ல நம்பிக்கை இல்லாம இருந்தேன். படம் நல்லா இருந்துச்சி, அதனால கண்டிப்பா பண்ணனும்னு முடிவு பண்ணேன். இந்தப் படத்துல நடிச்சது நல்ல அனுபவமா இருந்தது,” என்றார் தமன்னா.

Read Previous

கார்த்தி நடிக்கும் ‘கைதி’ – டிரைலர்

Read Next

தி வால் – விஜய் டிவியில் உலகின் நம்பர் 1 கேம் ஷோ

Most Popular