’ஸ்டார்’ வெளியீடு: படக்குழுவினரின் திட்டம் என்ன?

‘ஸ்டார்’ படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன.

இளன் இயக்கத்தில் கவின், லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்டார்’. யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்தப் படத்தின் போஸ்டர்கள், வெளியிடப்பட்ட பாடல்கள் உள்ளிட்டவை தான் காரணம்.

தற்போது ‘ஸ்டார்’ வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன். இது குறித்து விசாரித்த போது, ‘ஸ்டார்’ படத்தின் வெளியீடு குறித்து இன்னும் படக்குழுவினர் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. ஏனென்றால் முதல் பாதி எடிட்டிங் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. இரண்டாம் பாதி எடிட்டிங் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.

அதனை முடித்து, படத்தின் எடிட்டிங் முடிவு செய்யப்பட்டவுடன் தான் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் துவங்கவுள்ளது. இப்போது உள்ள சூழலில் மே மாதம் வெளியிடலாமா என்று படக்குழுவினர் ஆலோசனையில் உள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘ஸ்டார்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ‘கிஸ்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கவின்.

Read Previous

இயக்குநராகும் திலீப் சுப்பராயன்

Read Next

மீண்டும் தனுஷ் இயக்கத்தில் தனுஷ்

Most Popular