தமிழ் சினிமாவில் பல முக்கியமான படைப்புகளைத் தந்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் 27வது படமாக உருவாகும் இப்படத்தை, டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். ‘பரிதாபங்கள்’ சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘பார்க்கிங்’ படத்தின் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கையாள, படத்தொகுப்புப் பணிகளை கலைவாணன் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக ராஜேஷ், ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு ஸ்டீவன் குமார் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.