சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண்

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் 22வது படத்தை சற்குணம் எழுதி இயக்குகிறார். 

அதர்வா, ராஜ் கிரண் ஆகியோருடன் முன்னனி கதாநாயகி ஒருவரும் படத்தில் நடிக்கிறார். 

ராதிகா சரத்குமார், R.K.சுரேஷ், ஜெயபிரகாஷ், துரை சுதாகர் (களவாணி 2 வில்லன்), சிங்கம் புலி, ரவி காலே (கன்னடம்). சத்ரு(கடைக்குட்டி சிங்கம் வில்லன்), பால சரவணன், ராஜ் ஐயப்பா, G.M.குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

லைகா புரடக்ஷன்ஸ் தலைமை செயல் அலுவலர் G.K.M.தமிழ்குமரன் கட்டமைக்க, நிர்வாக தயாரிப்பை சுப்பு நாராயண் மேற்கொள்கிறார். 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படமான ‘உஸ்தாத் ஓட்டல்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட் -ராஜா முகமது, ஆர்ட் – J.K.ஆண்டனி, காஸ்ட்யூமர்-நட்ராஜ், மேக்கப் மேன்-K.P.சசிகுமாரும், Stills-மூர்த்தி மௌலியும். பாடல்கள் -கவிஞர் விவேகா, மணி அமுதவன், நடனம்-பாபி ஆண்டனி, தயாரிப்பு மேற்பார்வை – M.காந்தன், PRO – சுரேஷ் சந்திரா, ரேகா D’One. 

காவிரி ஆற்றுப்படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாக இருக்கும் திருவையாற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட இருக்கிறது. 

யதார்த்தமான குடும்பப்பாங்கான படமாக உருவாக இருக்கும் இந்தப் படம் விரைவில் ஒரே கட்டமாக படமாக்கப்பட இருக்கிறது.

Read Previous

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

Read Next

கிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபஸ்டின் பி.சி. 524’

Most Popular