‘சர்தார்’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லஷ்மண்குமார் தயாரிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், யூகி சேது, முரளி சர்மா, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சர்தார்’.

‘இரும்புத்திரை, ஹீரோ’ ஆகிய படங்களுக்குப் பிறகு மித்ரன் இயக்கும் இப்படத்தில் கார்த்தி அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். 

இரண்டு வேடங்களுக்குமே படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம். 

சென்னை, மற்றும் கொடைக்கானல் காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்ட பின் தற்போது மைசூரில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம். இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளை பிரம்மாண்டமாக அமைத்துள்ளாராம் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும்படியான கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது ‘சர்தார்’. 

Read Previous

மார்ச் 18 அன்று தியேட்டர்களில் வெளியாகிறது ‘குதிரைவால்’.

Read Next

எதற்கும் துணிந்தவன் – பாமக, வன்னியர் சங்கம் மிரட்டலுக்கு ‘தமுஎகச’ கண்டம்