மார்ச் 18 அன்று தியேட்டர்களில் வெளியாகிறது ‘குதிரைவால்’.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’.

மனோஜ் மற்றும் ஷியாம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல் மற்றும் பலர் நடிக்க பிரதீப்குமார் இசையமைத்துள்ளார். 

“மனிதனின் நிகழ்கால உணர்வுகளும், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும்,  கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய முயற்சியாக ‘குதிரைவால்’ படம் பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்,” என்கின்றனர் இப்படத்தின் இயக்குனர்கள் மனோஜ், ஷியாம்.

இதுபோன்ற படங்கள் திரைப்பட விழாக்களிலும் , விருதுகளுக்காகவும் திரையிடப்படுவதுண்டு. முதல் முயற்சியாக பொதுமக்களுக்காக திரையரங்குகளில் வெளியிடுகிறோம். நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படங்கள் சமூகக் கருத்துக்கள் கொண்டவையாக இருக்கும். ‘குதிரைவால்’ முற்றிலும் மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் என்கிறது, படத் தயாரிப்பு நிறுவனம்.

மார்ச் 18 அன்று தியேட்டர்களில் வெளியாகிறது ‘குதிரைவால்’.

Read Previous

ராதேஷ்யாம் – காலம் வெல்லுமா ? காதல் வெல்லுமா ?

Read Next

‘சர்தார்’ படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் கார்த்தி

Most Popular