ராதேஷ்யாம் – காலம் வெல்லுமா ? காதல் வெல்லுமா ?

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள படம் ‘ராதேஷ்யாம்’. 

காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும் போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா ? கனவு கலையும் பொழுது கணிப்பு மெய்யாகுமா ?, விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. 

காலம் வெல்லுமா ? காதல் வெல்லுமா ? எனும் கேள்விக்கு வெள்ளித் திரையில் விடை கூற வருகிறது ராதே ஷ்யாம். 

ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் தமனின் மனதை உருக்கும் இசையில், மதன் கார்க்கியின் வசனம் மற்றும் பாடல்களில் வண்ணத் திரைக் கவிதையாக உருவெடுத்துள்ள இந்தத் திரைப்படம் இந்த மார்ச் 11 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. 

முன்னாள் காதலர்களுக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் ஒரு மறக்கமுடியாத விருந்தாக அமையும் என்கிறார் இயக்குநர் ராதா கிருஷ்ணகுமார்.

Read Previous

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’

Read Next

மார்ச் 18 அன்று தியேட்டர்களில் வெளியாகிறது ‘குதிரைவால்’.