சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஆரம்பம்

நியூ சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் வழங்கும் முதல் தயாரிப்பில் அந் நிறுவனத்தின் உரிமையாளர் Legend சரவணன் நாயகனாக அறிமுகமாகிறார்.

இன்று (01.12.19) காலை AVM சரவணன் குத்துவிளக்கு ஏற்ற, S.P. முத்துராமன்கிளாப் அடிக்க, AVM ஸ்டுடியோவில் பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

இரட்டை இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி எழுதி இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அறிமுக நாயகி கீத்திகா திவாரி நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெவங்கட், மயில்சாமி, லதா , கோவை சரளா, தேவி மகேஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்க மிகப் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக உள்ளது.

மற்றொரு கதாநாயகியாக பிரபல நடிகை ஒருவரும் நடிக்க இருக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, S.S.மூர்த்தி அரங்கம் அமைக்க, ரூபன் எடிட்டிங் பொறுப்பை கவனிக்க, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, முதல் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு நிகில் முருகன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளிலும் படமாக உள்ளது.

இந்த படத்தில் “எதிர்பாராததை எதிர்பார்க்கலாம்,” என்கிறார்கள் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி.

Read Previous

சசிகுமார் நடிக்கும் ‘ராஜவம்சம்’, பொங்கல் வெளியீடு

Read Next

சந்தானம் நடிக்கும் டகால்டி – டீசர் – 4 Tamil Cinema

Most Popular