சசிகுமார் நடிக்கும் ‘ராஜவம்சம்’, பொங்கல் வெளியீடு

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ள படம் ‘ராஜ வம்சம்’.

அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்க, கதாநாயகியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார்.

இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் .

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியிருப்பது இதுவே முதன்முறை.

தனது படங்களில் எண்ணற்ற நட்சத்திரங்களை நடிக்க வைத்து படங்களை இயக்கிய சுந்தர் -சி.யிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு .

சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘ராஜ வம்சம்’ படத்தை 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Read Previous

ஜோதிகா, கார்த்திக்கு சூர்யா பாராட்டு

Read Next

சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஆரம்பம்

Most Popular