பிறந்தநாளில் படப்பிடிப்பு ஆரம்பம்
கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமான ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 7) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தலைப்பு முதல் பார்வை போஸ்டர்கள் நேற்று (நவம்பர் 6) வெளியிடப்பட்டது.
கமல்ஹாசனின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
தனித்துவமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கியுள்ள எஸ்.யு. அருண்குமார், கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணைந்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகவும், கே.எஸ். சுனில் ஒளிப்பதிவாளராகவும், சி.எஸ். பாலச்சந்தர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், அம்ரிதா ராம் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘சண்டியர்’ படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.