ஸ்ரீகாந்த், தினேஷ் நடிக்கும் ‘சம்பவம்’

“மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு” ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் ‘சம்பவம்’.

இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். அம்ரிஷ் இப்டத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கதையின் நாயகன்கள் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், கதாநாயகிகள் பூர்ணா, சிருஷ்டி டாங்கே, தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் உள்ளிட்ட படக்குழுவினரும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஜாக்குவார் தங்கம், இயக்குனர்கள் பேரரசு, ஏ.வெங்கடேஷ், தரணி, திருமலை, நடிகர் நட்ராஜ், நாஞ்சில் சம்பத், தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன் உள்ளிட்ட பிரபலங்களும் பலர் கலந்து கொண்னர்.

Read Previous

தமிழ் சினிமா – அக்டோபர் 11, 2019 வெளியாகும் படங்கள்

Read Next

விஜய் நடிக்கும் ‘பிகில்’ – டிரைலர்

Most Popular