வெங்கடேஷ் நடிக்கும் “சைந்தவ்”

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் தயாராகும் ' வெங்கி 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்தப் படத்திற்கு 'சைந்தவ்' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான காணொளியும்,  படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

'ஹிட்' பர்ஸ்ட் கேஸ் மற்றும் 'ஹிட்' செகண்ட் கேஸ்  திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'சைந்தவ்'. இதில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விக்டரி வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பி. ஹெச். கேரி கவனிக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், கிஷோர் தல்லூர் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

https://bit.ly/SaindhavGlimpse 

Read Previous

என் அம்மாவை கவனித்தேன், படத்தில் நடித்தேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்!

Read Next

சமுத்திரக்கனி நடிக்கும் “தலைக்கூத்தல்”

Most Popular