உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த படம் ‘மாரி 2’.
இப்படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஆனது. இந்த வருடம் ஜனவரி 2ம் தேதி இப்பாடலை யு டியூபில் வெளியிட்டனர். வெளியானது முதலே அடுத்தடுத்து பல சாதனைகளைப் படைத்தது.
தென்னிந்திய அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையுடன் 71 கோடிக்கும் அதிகமான பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது.
இந்த வருட 2019ல் அதிக அளவில் பார்க்கப்பட்டு முதலிடத்தைப் பிடித்த பாடல் ‘ரௌடி பேபி’ என யு டியூப் அறிவித்துள்ளது.
மேலும் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் வீடியோக்களில் 7வது இடத்தை ரௌடி பேபி பிடித்துள்ளது. இதை பில்போர்ட் இணையதளம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா பாடல் ஒன்றிற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பெருமை இது.
‘ரௌடி பேபி’ பாடலை தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடியுள்ளார். பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.