ராணா டகுபட்டிக்கு டிசம்பர் மாதம் திருமணம்

தமிழில் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் அறிமுகமானாலும், ‘பாகுபலி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அதிகம் அறிமுகமானவர் ராணா டகுபட்டி. அந்தப் படத்தில் பல்லதேவன் என்ற மன்னன் ஆக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ‘காடன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கொரானோ ஊரடங்கு முடிந்த பின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகை த்ரிஷாவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டவர். 

இன்று திடீரென அவரது காதலியை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். டிவிட்டரில் அவருடைய காதலியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘அவள் ஆம் என்று சொல்லிவிட்டாள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் மிஹீகா பஜாஜ் என்பவர்தான் ராணா டகுபட்டியின் காதலி. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர், லண்டனில் இன்டீரியர் டிசைன் பற்றி முதுகலை படிப்புப் படித்தவர்.

இவர்கள் இருவரின் திருமணம் டிசம்பர் மாதம் நடக்க வாய்ப்புள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

ராணாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முன்னணி ஹீரோயின்கள் பலரு உடனடியாக வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

ஓடிடி தளத்திற்காக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ குறும்படம் ?

Read Next

‘அண்ணாத்த’ – பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு

Most Popular