‘மகாராஜா’ படத்திற்கு ஏற்பட்டுள்ள புதுவித சிக்கல்

‘மகாராஜா’ படத்திற்கு, படக்குழுவினரே எதிர்பார்க்காத புதுவித சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மகாராஜா’. இது விஜய் சேதுபதி நடித்துள்ள 50-வது படமாகும். 

இதில் அனுராக் கஷ்யாப், மம்தா மோகன்தாஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ‘மகாராஜா’ படத்துக்கு யாருமே எதிர்பார்க்காத புதுவித சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

என்னவென்றால், படத்தின் ட்விஸ்ட் என்னவோ, அது வெளியே கசிந்துவிட்டது.

‘மகாராஜா’ படத்தினை வியாபாரம் செய்வதற்காக, முக்கியமான சிலருக்கு திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 

அதில் படம் பார்த்தவர்கள் இறுதிகாட்சியின் ட்விஸ்ட் என்னவோ அதை வெளியே கசியவிட்டுள்ளார்கள். இப்போது திரையுலகில் ‘மகாராஜா’ படம் எப்படி என்று கேட்டால், பலரும் அந்த ட்விஸ்ட்டை மையப்படுத்தியே பதில் கூறி வருகிறார்கள்.

இதனால், ‘மகாராஜா’ படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், இனி யாருக்கும் படத்தினை திரையிட்டுக் காட்ட வேண்டாம் என்று தொழில்நுட்பக் குழுவினர் தரப்பிலிருந்து தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

Read Previous

‘டாடா’ இயக்குநரின் புதிய திட்டம்

Read Next

பெரியாரை அவமதிக்கும் படம் இல்லை ‘வடக்குபட்டி ராமசாமி’, இயக்குனர் விளக்கம்

Most Popular