2019ல் வெளிவந்த ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப் படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.
அதற்கடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நாயகனாகவும் அறிமுகமான படம் ‘லவ் டுடே’. . 2022ல் வெளிவந்த அந்தப் படம் வரவேற்பைப் பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. அடுத்து பிரதீப் நாயகனாக நடித்து இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த ‘டிராகன்’ படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றி பெற்றது.
பிரதீப் நாயகனாக நடித்த மூன்றாவது படமான ‘டியூட்’ படம் கடந்த வாரம் வெளியாகி தற்போது 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
நாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து மூன்று 100 கோடி படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
அவர் நாயகனாக நடித்துள்ள அடுத்த படமான ‘லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி’ படம் இந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது.