ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’/
இப்படத்தி ஆன்ட்ரியா முதன்மைக் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்க பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா இசையமைப்பில், சிவா சரத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார்.
விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியீடு பற்றியும் அறிவிக்க உள்ளது படக்குழு.