ஸ்ரீவாரி பிலிம் சார்பில் ரங்கநாதன் தயாரிப்பில், நந்தா பெரிய சாமி இயக்கத்தில், கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’.
கொரானோ தொற்று காலத்தில் முதல் அலையின் போது ஆரம்பமான இப்படம் இரண்டாவது அலையிலும் பல தடங்கல்களைச் சந்தித்து தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இப்படத்தில் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
அதனால், கட்டுப்பாடுகளின்படி அனைத்தையும் முறையாகச் செய்து யாருக்கும் எந்த சிக்கலும் எழாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள்.
குடும்பப் பாங்கான கதை என்பதை படத்தின் தலைப்பைப் பார்க்கும் போதே புரிந்து கொள்ளலாம்.
விரைவில் படத்தின் இசை, டிரைலர், பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வரும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன்.