உடலை ஏற்றி அதிர வைக்கும் ஆர்யா

‘அட்டகத்தி, கபாலி, காலா’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்க உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்க உள்ளார்.

வட சென்னை கதைக் களத்தில் ஒரு பாக்சர் கதாபாத்திரத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்காக தன்னுடைய உடலை பயங்கரமாக எற்றி அதிர வைத்துள்ளார் ஆர்யா.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களே அதற்கு சாட்சி. நடிப்புக்காக எதையும் செய்யும் நடிகர்கள் எனப் பெயரெடுத்தவர்கள் கமல்ஹாசன், விக்ரம். அந்த வரிசையில் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நான் கடவுள்’ படத்தில் நடித்த போதே இணைந்தார் ஆர்யா.

இருந்தாலும் பா.ரஞ்சித் படத்திற்காக ஆர்யா ஏற்றியுள்ள கட்டுமஸ்தான உடல் கட்டு, தமிழ் சினிமாவில் இதுவரை வேறு எந்த ஒரு நடிகரும் செய்யாத ஒன்று என ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

Read Previous

சிவாஜி கணேசன் – சில அரிய தகவல்கள்….

Read Next

எனக்கு பல கனவுகள் இருக்கிறது – ஹிப்ஹாப் தமிழா

Most Popular