ஷங்கர், கமல் படத்திற்காக விஜய், அஜித் படங்களை மறுத்த அனிருத் ?

கமல்ஹாசன், ஷங்கர் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

‘இந்தியன் 2’ படத்தை முதலில் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அதிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிகிறது. ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தைத் தயாரித்த ஏ.எம். ரத்னம் ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்கலாம் என்று தகவல் வெளியானது. ஆனால், அதுவும் உறுதி செய்யப்படவில்லை.

அனேகமாக, ‘இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்கி வரும் ‘2.0’ படத்தைத் தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கலாம் என்கிறார்கள்.

இதனிடையே, இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் மறுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மணிரத்னம் படம், ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் படம் ஆகியவற்றில் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அவர் தன்னால் ‘இந்தியன் 2’ படத்திற்கும் பணி புரிய இயலாது என்று சொல்லிவிட்டாராம்.

அதனால், இயக்குனர் ஷங்கர் இசையமைப்பாளர் அனிருத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்கிறார்கள். ஷங்கர், கமல்ஹாசன் இணையும் படம் என்பதால் அனிருத்தும் சம்மதம் சொல்லியுள்ளதாகத் தகவல். இந்த ‘இந்தியன் 2’ படத்தை மனதில் வைத்துதான் அவர் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’, மற்றும் ஏ.ஆர். முருகதாஸ், விஜய் படத்திற்கும் இசையமைக்க மறுத்துவிட்டாராம்.

அஜித், விஜய் படங்களை விட கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியை பெரிது என நினைத்துவிட்டாரோ அனிருத் ?.

Read Previous

தமிழ் சினிமா 2017 – அதிகப் படங்களில் நடித்த நடிகை யார் ?

Read Next

தமிழ் சினிமா 2017 – ஏமாற்றமடைந்த ஹீரோக்கள்

Most Popular