தமிழ் சினிமா 2017 – ஏமாற்றமடைந்த ஹீரோக்கள்

தமிழ் சினிமா, 2017ம் ஆண்டு சில எதிர்பாராத அதிர்ச்சிகளையும் தந்தது. அப்படிப்பட்ட அதிர்ச்சி தமிழ் ஹீரோக்களுக்குக் கிடைத்ததை விட மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்தவர்களுக்குத்தான் அதிகமாக இருந்தது.

‘விவேகம்’ படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமானார் விவேக் ஓபராய். ஹிந்தித் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவர். ‘விவேகம்’ படத்தில் அவரை வில்லத்தனம் செய்ய வைத்ததை விட அஜித் புராணம் பாட வைத்தார் இயக்குனர் சிவா. அதுவே விவேக் ஓபராயின் வில்லத்தனம் வீழ்ந்ததற்கும் காரணமாக அமைந்தது.

‘ஸ்பைடர்’ படம் மூலம் மிகுந்த எதிர்பார்ப்பில் தமிழில் நேரடியாக நாயகனாக அறிமுகமானார். அவர் நடித்து வெளிவந்த டப்பிங் படங்களே பரவாயில்லை என்ற அளவிற்குத்தான் ‘ஸ்பைடர்’ படத்தின் வெற்றி அமைந்தது. தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்த ஒரு ஹீரோவை, தமிழில் அறிமுகப்படுத்தி அவருடைய இமேஜையே குலைத்ததில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்குப் பெரும் பங்குண்டு. இனி, தமிழ் சினிமா பக்கம் மகேஷ் பாபு தலை வைத்து படுப்பாரா என்பதும் சந்தேகம்தான்.

‘ரிச்சி’ படத்தின் மூலம் ஒரு முழுமையான கதாநாயகனாக அறிமுகமானார் நிவின் பாலி. மலையாளத்து ரசிகர்கள் கொண்டாடி வரும் நிவின், ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டார். நிவின் பாலி இதற்கு முன் நடித்த ‘நேரம்’ படம் இரு மொழிப் படமாக படமானது. ஆனால், ‘ரிச்சி’ தமிழில் மட்டுமே எடுக்கப்பட்டது. இப்படி ஒரு படத்தில் நிவின் எப்படி நடித்தார் என்பதுதான் ஆச்சரியம்.

ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் குறிப்பிடத்தக்க ஹீரோக்களாக இருக்கும் விவேக் ஓபராய், மகேஷ் பாபு, நிவின் பாலி, ஆகியோருக்கு 2017ம் ஆண்டின் தமிழ் சினிமா  பெரும் ஏமாற்றத்தைத் தந்துவிட்டது.

மீண்டும் நல்ல படங்களின் மூலம் வாருங்கள், நாயகர்களே…வரவேற்கக் காத்திருக்கிறோம்….

Read Previous

ஷங்கர், கமல் படத்திற்காக விஜய், அஜித் படங்களை மறுத்த அனிருத் ?

Read Next

விஜய் டிவியில் புதிய தொடர் ‘நினைக்க தெரிந்த மனமே’