அழகு, நடிப்பு இவையிரண்டையும் சேர்த்துதான் ஒரு நடிகையைக் குறிப்பிட வேண்டும். அழகாக மட்டும் இருக்கிறார் என்று சொல்வதைவிட, நன்றாக நடிக்கவும் செய்கிறார் என்பதுதான் ஒரு நடிகைக்கான சிறந்த அறிமுகம்.
அப்படி அழகும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகையாக வளர்ந்து வருகிறார் ஜெசிகா பவ்லின்.
‘துப்பறிவாளன், ராட்சசன்’ ஆகிய படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தவர். அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் வர உள்ள ‘ஏஞ்சலீனா’ படத்தில் சூரியின் தங்கையாக நடித்திருக்கிறார்.
தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வரும் ஜெசிகா அடுத்து ‘ஏகாலி’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து பல புதிய படங்களில் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.