மீண்டும் படத்தயாரிப்பில் ரம்பா அண்ணன்

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை ரம்பாவின், அண்ணன் வாசு படத் தயாரிப்பில்  இறங்குகிறார். கிட்டத்தட்ட 15வருடஅனுபவத்தோடு சினிமாவில் பல படங்களை தயாரித்தவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில், விறு விறுப்பாக இறங்கி உள்ளார் ,சிரஞ்சீவி ,பரிசுரி சகோதரர்கள் , மற்றும் இயக்குனர் சித்திக் ஆகியோரிடம் 40 படங்களில் அசோசியேட் ஆக வேலை பார்த்தவர் சுரேஷ்.  இவரை தமிழ் , தெலுங்கில் இயக்குனராக அறிமுகப்படுத்த உள்ளார் வாசு.அதில் நடிக்க நடிகர் நகுல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார், நகைச்சுவை மற்றும் காதல் கலந்த படமாக தயாராக உள்ள இப்படத்தை வாசு மிக பிரம்மாண்ட முறையில் படம் எடுக்க திட்ட மிட்டு உள்ளார்,  படத்தலைப்பு மற்றும் ஹீரோயின் பற்றி விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.

Read Previous

இயக்குனர் அமீரின் சைக்கிள் கனவு…

Read Next

விரைவில் பாகன்…