கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் ‘மாற்றான்’ படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இப்படம் தெலுங்கிலும் ‘பிரதர்ஸ்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் ஒரு கதாபாத்திரத்திற்கு சூர்யாவே ‘டப்பிங்’ பேசியுள்ளார். மற்றொரு கதாபாத்திரத்திற்கு அவருடைய தம்பியும், முன்னணி நடிகருமான கார்த்தி ‘டப்பிங்’ பேசியுள்ளார்.
இது பற்றிய தகவலை மாற்றான் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா தெரிவித்தார். சூர்யா, கார்த்தி இருவரின் படங்களும் ‘டப்பிங்’ செய்யப்பட்டு அங்கும் அவர்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது எனப்து குறிப்பிடத்தக்கது.