இன்று அக்டோபர் 5ம் தேதி வெளியாகும் படங்கள்.
இங்கிலீஷ் விங்கிலீஷ்
ஈராஸ் இன்டர்நேஷனல், பால்கி தயாரிப்பில் கௌரி ஷின்டே இயக்கியிருக்கும் படம். இசை – அமித் த்ரிவேதி. ஸ்ரீதேவி, சிறப்புத் தோற்றத்தில் அஜித் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
புதிய காவியம்
பிரண்ட்ஸ் சர்க்கிள் மூவீஸ் தயாரிப்பில் பெ.ந.ரமேஷ்குமார் இயக்கியிருக்கும் படம். இசை – தஷி. புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களைத் தவிர இரண்டு டப்பிங் படங்களும் வெளியாகின்றன.
புதுவை மாநகரம்
மம்முட்டி, அனுஷ்கா, நதியா நடித்துள்ள ‘புதுவை மாநகரம்’ மலையாள டப்பிங் படமும் வெளியாகிறது. இயக்கம் – சோஹன், இசை – ஜேம்ஸ் வசந்தன்.
சிவாங்கி
ஓஷோ துளசி ராம் இயக்கத்தில் சார்மி கதாநாயகியாக நடித்துள்ளார்.