அன்பு பிக்சர்ஸ் சார்பாக ஜெ. அன்பழகன் தயாரிக்க அமீர் இயக்கும் படம் ‘ஆதி பகவன்’. ஜெயம் ரவி, நீது சந்திரா, சுதா சந்திரன், பாபு ஆண்டனி மற்றும் பலர் நடிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 6ம் தேதியன்று கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடைபெற உள்ளது. இதற்காக படக்குழுவினர் உட்பட 50 பேர் கனடாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா , இணையும் நான்காவது படம் இது. ஜெயம் ரவி, இயக்குனர் அமீருடன் இணைந்து பணிபுரியும் முதல் படம்.
கனடாவில் இசை வெளியீடு முடித்து சென்னை திரும்பிய பின் , இங்கு படத்தின் டிரைலர் வெளியீடு நடை பெற உள்ளது என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.