1980களின் வெள்ளி விழா நாயகன் மோகன் மீண்டும் திரையுலகிற்கு வரும் முயற்சியில் இருக்கிறார். ஏற்கெனவே, பெயரிடப்படாத இரண்டு படங்களில் விரைவில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அவர் தயாரிப்பாளராகவும் மாற இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். மலையாளத்தில் ஜெயசூர்யா, அனூப் மேனன், மேக்னா ராஜ் நடித்த வெற்றிப் படமான ‘பியூட்டிஃபுல்’ என்ற படத்தைத்தான் மேற் சொன்ன மூன்று மொழிகளில் தயாரிக்க இருக்கிறார்.
மூன்று மொழிகளுக்கென்று தனித் தனி இயக்குனர்கள், தனித் தனி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். விரைவில் இதைப் பற்றிய மற்ற விவரங்களை அறிவிக்க இருக்கிறார்கள்.
வாங்க மோகன் ஸார், மீண்டும் மைக் பிடித்து இந்த காலத்து ரசிர்களுக்கும் நீங்க யாருன்னு சொல்லுங்க…