குறுகிய காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தைச் சேர்த்திருப்பவர் பவர் ஸ்டார். தற்போது ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்திலும் நடிக்கிறார் என வதந்தியாக ஒரு தகவல் பரவி வருகிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில்தான் பவர் ஸ்டார் இப்போது இயக்குனர் கௌதம்மேனனுடன் ஒரு காட்சியில் நடிக்க இருக்கிறார்.
படத்தின் கதைப்படி பவர் ஸ்டார் சினிமாவில் நடிக்க முயன்று வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காட்சிப்படி கௌதம் மேனனை சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்கும் படி படத்தில் ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியில் நடிக்க இயக்குனர் கௌதம் மேனனை அணுகி இருக்கிறார்கள். அவரும் நடிப்பதற்கு சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.
போகப் போக கௌரவ வேடத்திலேயே பல இயக்குனர்களுடன் பவர் ஸ்டார் நடித்து விடுவார் போலிருக்கிறது.