இளையராஜாவின் அடுத்த வசந்தம்

சைஞானி இளையராஜாவின் இசையில் ‘நீதானே என் பொன்வசந்தம் ’ படத்தின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாக அமைந்து விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே அதிகமாகி விட்டது.

தற்போது, இளையராஜாவின் இசையில் அடுத்த வசந்தமாக ‘மறந்தேன் மன்னித்தேன்’ படத்தின் இசை வரும் 29ம் தேதியன்று வெளியிடப்பட இருக்கிறது. தமிழ், தெலுங்கு (குண்டல்லோ கோதாரி)  என இரு மொழிகளில் தயாராகியுள்ளது இப்படம்.

குமார் நாகேந்திரா இயக்கத்தில், ஆதி, டாப்ஸீ, லட்சுமி மஞ்சு மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

துள்ளி ஆடிய பிரகாஷ்ராஜ்

Read Next

டிசம்பரில் ‘NEP’

Most Popular