சந்தானம் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா. ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், சேது, விசாகா இப்படத்தில் நடிக்கிறார்கள்.
கே.எஸ். மணிகண்டன் இயக்கும் இப்படத்திற்கு இசை தமன். சமீபத்தில் இப்படத்திற்காக படமாக்கப்பட்ட இரண்டு பாடல்களுடன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.
டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் பல திரைப்படங்கள் வெளி வரும் சூழ்நிலையில் இப்படமும் போட்டிக் களத்தில் புதிதாக குதித்துள்ளது.