அனைவரும் விரும்பும் ‘அனுஷ்கா’

      தமிழ் சினிமா ஹீரோயின்களில் இப்போது அனைவரும் விரும்பும் ஹீரோயினாக இருப்பவர் அனுஷ்கா. இப்படி மட்டும் சொன்னால் போதாது, தெலுங்கிலும் கூட பல ஹீரோக்களுக்கு ஃபேவரிட்டான ஹீரோயின் என்றால் அனுஷ்காதான்.

தமிழில் ‘ரெண்டு’ படத்தில் மாதவன் ஜோடியாக அறிமுகமானாலும், விஜய்யுடன் நடித்த ‘வேட்டைக்காரன்’ இவரை அனைத்து ரசிர்களிடமும் சென்றடைய வைத்தது. தொடர்ந்து சூர்யா ஜோடியாக ‘ சிங்கம்’ படத்திலும் , ‘தெய்வத் திருமகள்’ படத்தில்   யார் ஜோடியாக இல்லாமலும், அடுத்து விக்ரம் ஜோடியாக ‘தாண்டவம்’ படத்திலும் நடித்தார்.

தற்போது, கார்த்தி ஜோடியாக ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்திலும், மீண்டும் சூர்யா ஜோடியாக ‘சிங்கம் 2’ படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கில் வெளியான ‘அருந்ததி’ இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இன்னும் சில வருடங்களுக்கு தமிழ், தெலுங்கில் ‘அனுஷ்கா’ தான் முன்னணி ஹீரோயினாக இருப்பார் என்கின்றனர்.

 

Read Previous

ஜனவரி 11ல் விஸ்வரூபம் ரிலீஸ்

Read Next

ஜாக்கிசானின் கடைசி ஆக்ஷன் படம் ‘CZ 12’