அப்பாடா…..ஒரு வழியாக நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் முகத்தை காட்டிவிட்டார் இயக்குனர் மணிரத்னம்.
80களின் காதல் நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் மணிரத்னம் இயக்கி வரும் ‘கடல்’ படத்தில் அறிமுகமாவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இப்படத்தின் நாயகியாக நடிப்பவர் 80களின் நாயகி ராதாவின் இளைய மகள் துளசி. இவர் எப்படி இருப்பார் என இதுவரை நமக்குத் தெரியாது.
சில நாட்களுக்கு முன் கௌதம் ‘முதுகை’ மட்டும் காட்டிய இயக்குனர் மணிரத்னம் தற்போது, கௌதமின் இடுப்பு வரையான தோற்றத்தை காட்டியிருக்கிறார். அதிலும் முகம், சரியாக பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில நாட்கள் கழித்து கண்டிப்கபா ‘ஆள்’ உயர புகைப்படத்தை காட்டுவார் என நம்புவோம்.
‘கடல்’ நாயகி துளசி முகத்தை படத்தோட ரிலீசுக்கு முன்பாக காட்டி விடுவார் என எதிர்பார்க்கலாம்…
