திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ஸ்டுடியோ க்ரீன் வெளியீட்டில் டிசம்பர் 14ம் தேதியன்று வெளிவர உள்ள படம் ‘கும்கி’.
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியருப்பவர் பிரபு சாலமன், இசை – இமான்.
இப்படத்திற்கு அனைவருக்கும் பார்க்கும் படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. படத்திற்கு எந்த வித வெட்டும் இல்லாமல் இதை வழங்கியுள்ளனர்.
‘மைனா’ படத்திற்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் வரும் படம் என்பதாலும், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு அறிமுகம் ஆகும் படம் என்பதாலும் இப்படத்திற்கு நிறைவே எதிர்பார்ப்பு உள்ளது.
தெலுங்கில் இப்படம் ‘கஜராஜு’ என்ற பெயரில் அதே தினத்தில் வெளியாகிறது.