இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு ‘இது ரஜினி சாங்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்பாடலை அண்ணாமலை எழுதியிருக்கிறார்.
இந்த இசை ஆல்பத்தை ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார்.
ராகவா லாரன்ஸ் தீவிரமான ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்தைப் பற்றி அவர் கூறியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் ஸ்டார் அவர்களின் பிறந்த நாளன்று அவருக்கு ஏதாவது ஒரு பிறந்த நாள் பரிசு தருவது வழக்கம். சமீபத்தில் நான் ராகவேந்திரா கோயில் கட்டிய பிறகு, சூப்பர் ஸ்டார், ராகவேந்திரா சுவாமிக்கு உடுத்தியிருக்கும் துண்டை மட்டுமே பரிசாக கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்தார்.
இந்த வருடம் 12-12-12 என்ற சிறப்பான நாளில் வருவதால், ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவரிடம் சொல்லி விட்டு, இந்த பாடலை தயாரித்திருக்கிறேன். அவருக்கு புகழ்ச்சி என்றால் பிடிக்காது, அதனால் அதிகமான புகழ்ச்சி இல்லாமல் எளிமையாகவும், யதார்த்தமாகவும், சிறு வயது முதலே அவருடைய ரசிகன் என்ற முறையில் பார்த்து பார்த்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்,” என்றார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியே இந்த பாடலை மலேசியாவைச் சேர்ந்த எம்சி ஜேஸ் என்பவருடன் இணைந்து பாடியுள்ளார்.
இந்த பாடலை கீழுள்ள லிங்கில் அனைவரும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
https://soundcloud.com/