‘கடல்’ அடுத்த வாரிசு

     

     மணிரத்னம் தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கடல்’.ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க 80களின் வெற்றிகரமான காதல் ஜோடிகளான கார்த்திக், ராதாவின்  வாரிசுகள் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.

கார்த்திக் மகன் கௌதம், ராதாவின் இளைய மகள் துளசி, இந்த படத்தின் மூலம் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகிறார்கள். பொதுவாகவே, பிரபலமான, முன்னணி   இயக்குனர்களின் படங்களில் அறிமுகமாவதையே வாரிசு நடிகர்கள் விரும்புவார்கள். அது இந்த படத்தில் கௌதமுக்கும், துளசிக்கும்  நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இது நாள் வரை, இவர்களது இருவரின் புகைப்படங்களைக் கூட ‘பொத்தி பொத்தி’ வைத்திருந்தார் இயக்குனர் மணிரத்னம். தற்போது, ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறார்.

‘கடல்’ படம் வாரிசு நட்சத்திரங்களுக்கு எப்படி அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Read Previous

தென்னிந்தியாவின் ஸ்டார் த்ரிஷா

Read Next

‘டும் டும் பீ பீ’ – படத்தோட தலைப்புதான் இது…

Most Popular