‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் விஜய் நடித்து வரும் படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படாமலே இருந்தது.
‘தாண்டவம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
அமலா பால், விஜய் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு இப்போது ‘தலைவா’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
தங்கமகன், தளபதி ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாகவும் ஆனால் ரஜினி பட பெயர்கள் வேண்டாம் என விஜய் சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்போது ‘தலைவா’ என தலைப்பு வைத்து இளையதளபதி ரசிகர்களை மகிழ வைத்திருக்கிறார்கள்.