‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தை தமிழ் ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட்டார்கள். அறுவெறுக்கத்தக்க, ஆபாசமான வசனங்கள், காட்சிகள் கார்த்தி மீதான ரசிகர்களின் பார்வையைக் கூட மாற்றி விட்டதாக கருதுகிறார்கள்.
ஏற்கெனவே, தமிழ் ரசிகர்களை விட தனக்கு தெலுங்கு ரசிகர்களை அதிகம் பிடிக்கும் என கூறியவர் கார்த்தி. ஏனென்றால், அவரை தமிழ் ரசிகர்கள் எப்போதெல்லாம் நிராகரிக்கிறார்களோ, அப்போதெல்லாம் தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார்களாம்.
அந்த வகையில் தமிழில் பலத்த தோல்வியடைந்த ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவரும் என எதிர்பார்க்கிறது அலெக்ஸ் பாண்டியன் டீம்.
வரும் 25ம் தேதி ‘பேட் பாய்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாக இருக்கிறது அலெக்ஸ்பாண்டியன். அங்காவது ‘குட் பாய்’ என பெயர் எடுக்கிறாரோ என பார்ப்போம்….