‘நீர்ப் பறவை’ படத்திற்குப் பிறகு சீனு ராசாமி இயக்கும் படத்திற்கு ‘சொந்த ஊரு’ என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தின் நாயகனாக ‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் சீனு ராமசாமி ஹீரோவாக அறிமுகப்படுத்தி, தற்போது வெற்றி நாயகனாக உலா வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், ‘அட்டகத்தி’ படத்தில் ஹீரோவாக நடித்த தினேஷும் நாயகனாக நடிக்கிறார்கள்.
இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் முதலில் விமல் நடிப்பதாக இருந்தது. அதன் பின் அவருக்குப் பதிலாக தினேஷ் நடிக்கிறார். இப்படித்தான் ‘நீர்ப்பறவை’ படத்தில் விமல் முதலில் நாயகனாக நடிப்பதாக இருந்தது. அதன் பின் அவர் மாற்றப்பட்டு அந்த கேரக்டரில் விஷ்ணு நடித்தார்.
இப்படத்தைப் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில்…