தீபிகாவுக்காக ‘ஹீல்ஸ்’ அணிந்த நடிகர்கள்

deepika-padukoneஇந்தியத் திரையுலகில் தற்போது உயரமான நடிகையாக இருப்பவர் ‘கோச்சடையான்’ நாயகி தீபிகா படுகோனே.

இவருடைய உயரத்திற்கு அட்ஜஸ்ட் செய்து நடிப்பதற்காக பல ஹீரோக்கள் ‘ஹீல்ஸ்’ அணிந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம் நாயகன் ரன்வீர் சிங்,  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘ராம் லீலா’ படத்திற்காக தீபிகாவுடன் இணைந்து நடிப்பதற்கு ‘ஹீல்ஸ்’ அணிந்து நடித்தாராம்.

தீபிகாவுடன் நடிக்கும் நாயகர்கள் ஹீல்ஸ் அணிந்து நடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக, தீபிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகரான சைப் அலிகான் கூட ‘லவ் ஆஜ்கல், ரேஸ் 2, காக்டெய்ல்’ படங்களிலும் ஹீல்ஸ் அணிந்துதான் நடித்தாராம். அவருடன் நடிக்கும் போது தீபிகா ஹீல்ஸ் உள்ள செருப்புக்களை அணிய மாட்டாராம்.

இதைப் பற்றி சைப் அலிகான் கூறும் போது, “தீபிகா ஏற்கெனவே நல்ல உயரமானவர். அவர் ஹீல்ஸ் அணிந்து நடித்தால் 6 அடிக்கும் மேல் உயரமாக இருப்பார். அவர் அமிதாப் போன்ற உயரமான ஹீரோக்களுடன்தான் நடிக்க வேண்டும்,” என்றார்.

இதே போன்ற பிரச்சனை தீபிகா ஹீரோயினாக அறிமுகமான ‘ஓம் சாந்தி ஓம்’ படத்திலும் ஏற்பட்டதாம். அப்படத்தின் நாயகன் ஷாரூக்கானுக்கும் தீபிகாவின்  உயரம் பிரச்சனையாக இருந்ததாம்.

ம்ம்…ஹீரோயினால் வந்த ஹீல்ஸ் பிரச்சனை….

Read Previous

தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜுன் 10ல் திறப்பு

Read Next

சம்பளத்தை உயர்த்திய பிரியா ஆனந்த்…