விஜய் படத்தில் சமந்தா…?

samantha‘தலைவா’ படத்தில் நடித்து முடித்து விட்டு விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய படத்தில் ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், சமந்தா இப்போது பல தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நாகசைதன்யா ஜோடியாக ‘மனம்’, ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ‘ராமய்யா ஒஸ்தாவையா’, பவன் கல்யாண் ஜோடியாக ‘அதரின்திக்கி தரேதி’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில், மீண்டும் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ‘ரபாசா’ படத்தில் நடிக்கப் போகிறார். அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா ஜோடியாக  ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கப் போகிறார்.

ஆக, இந்த ஆண்டு முழுவதும் சமந்தா பிஸியாக இருக்கிறார். விஜய் படம் அடுத்த ஆண்டு ஆரம்பமானால் அப்படத்தில் சமந்தா நடிக்கலாம் எனத் தெரிகிறது.

அப்படி, சூர்யா,  விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கும் போது தமிழிலும் முன்னணி நடிகையாக வர நிறையவே வாய்ப்புள்ளது.

Read Previous

மீண்டும் தெலுங்கு பாடல் பாடிய சிம்பு…

Read Next

மீண்டும் படம் இயக்கும் ஸ்ரீப்ரியா

Most Popular