சினிமாவில் போலித்தனம் ஒழிகிறது – வைரமுத்து பேச்சு

kavignar vairamuthuஅர்ஜுனின் தயாரிப்பு, இயக்கம் , நடிப்பில் ‘அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2’ படத்தின் துவக்க விழாவும், பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று, சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து குத்துவிளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். விழாவில் அர்ஜுன், நாயகிகள் சுர்வீன் சாவ்லா, சார்லேட் கிளேர், இசையைமப்பாளர் ஹரி கிருஷ்ணா, ஒளிப்பதிவாளர் வேணுகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் வைரமுத்து பேசும் போது, “ தலைமுறை தாண்டி நிற்கிறவர் என்ற அடைமொழிக்கு முழு பொருத்தமானவர் அர்ஜுன் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்.

32 ஆண்டுகள், 150 படங்கள், 8 மாநில விருதுகள், சில படங்களை இயக்கியவர், இது சாதாரண விஷயமல்ல.

32 ஆண்டுகள் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அர்ஜுன் அவர்களுடைய உழைப்பு, போராட்டம், எல்லாவற்றையும் விட நல்லெண்ணம், இவைகள் கூடித்தான் அவரை இந்த நீண்ட பயணத்திற்கு தயாரித்து வைத்திருக்கின்றன. இன்னும் ஒரு பயணத்திற்கு தயாரித்துக் கொண்டிருக்கின்றன என நான் நம்புகிறேன்.

அர்ஜுனிடம் இன்னும் வெறி குறையாமல் இருக்கிறது. “வெற்றிக்கும் வெறிக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம்”. இதை படத்தோட டயலாக்ல கூட நீங்க வச்சிக்கலாம்.  அர்ஜுனிடம் அதிக ஈடுபாடு உண்டு. அது அவருக்கு இன்னும் உயரத்தைக் கொடுக்கும்.

சினிமாவில் மிகை ஒழிகிறது. போலித்தனம் ஒழிகிறது. “வாங்க..வாங்க..வாங்க..’ என்பதெல்லாம் ஒழிகிறது. எது உண்மையோ அது மட்டும், எது நியாயமோ அது மட்டும், எது போதுமான உணர்ச்சியோ அது மட்டும், என்ற தலைமுறை வருகிறது.

எங்கு  அச்சம் இருக்கிறதோ, அங்கு பொய் வருகிறது. எங்கு அறியாமை இருக்கிறதோ அங்கு பொய் வரும். எங்கு அடிமைத்தனம் இருக்கிறதோ அங்கு பொய் வரும். இவை எதுவும் இல்லாத இடத்தில் பொய் வராது.

பொய்யற்ற தலைமுறை சினிமாவுக்குள் வருவதை நான் பார்க்கிறேன். இது ரொம்ப முக்கியம், ” என்றார்.

ஆம்…அதனால்தான் மதன் கார்க்கியும், யுவன்ஷங்கர் ராஜாவும் ‘பிரியாணி’ படத்தில் இணைந்து பணி புரிகிறார்கள் போலும்….

Read Previous

மீண்டும் இரு வேடங்களில் ஜெயம் ரவி…

Read Next

ஹீரோவின் ஒரு நாள் சம்பளம் 5 கோடி