ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், பரத்பாலா இயக்கத்தில் ஏஆர். ரகுமான் இசையமைப்பில், தனுஷ், பார்வதி மற்றும் பலர் நடித்துள்ள ‘மரியான்’ திரைப்படம் வரும் 21ம் தேதியன்று வெளியாகிறது.
இதுவரை வெளிவந்த தனுஷ் திரைப்படங்களை விட இந்த படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
‘வந்தே மாதரம்’ ஆல்பம் மூலம் உலகப் புகழ் பெற்ற கூட்டணியான பரத்பாலா – ஏஆர். ரகுமான் கூட்டணியில் வெளிவர இருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு.
படத்தின் டிரைலரும், பாடல்களும் ஏற்கெனவே பெரிய ஹிட்டாகி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.