இன்று 3 படங்களின் இசை வெளியீடு…

ya-yaரே நாள்ல படங்கள்தான் அதிகமா ரிலீஸ் ஆகும். இன்னைக்கு வித்தியாசமா ஒரே நாள்ல 3 படங்களோட இசை வெளியீடு நடக்குது.

இப்ப காமெடில கலக்கிட்டிருக்கிற சந்தானம், சிவா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க, ராஜசேகரன் இயக்கற ‘யா யா’, எழில் இயக்க, விமல், பிந்து மாதவி நடிக்கிற ‘தேசிங்கு ராஜா’,  தனுஷ், சாயா சிங் நடிச்சி சூப்பர் ஹிட்டான ஓடின ‘திருடா திருடி’ படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்ச ரமேஷ் .ஜி இயக்குனரா அவதாரமெடுக்கிற  ‘இருவர் உள்ளம் ’ ஆகிய 3 படங்களோட இசைதான் இன்னைக்கு ரிலீஸ் ஆகுது.

‘யா யா’ படத்துக்கு விஜய் எபினேசர் இசையமைச்சிருக்காரு. அனைத்துப் பாடல்களையும் விவேகா எழுதியிருக்காரு.

‘தேசிங்கு ராஜா’ படத்துக்கு இமான் இசையமைச்சிருக்காரு. அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்காரு.

‘இருவர் உள்ளம்’ படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைச்சிருக்காரு. அறிவுமதி, நா. முத்துகுமார், விவேகா, அண்ணாமலை பாடல்கள் எழுதியிருக்காங்க.

மூணு படத்துல எந்த பாட்டை முணு முணுக்கப் போறோம்…

Read Previous

‘தில்லு முல்லு 2’ இயக்குனர் பாலசந்தர் பாராட்டு

Read Next

‘மாயை’ பட பிரச்சனை – மாறி மாறி புகார்கள்…