இரண்டே இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் ‘வித்தையடி நானுனக்கு.”
பானுமுரளி – சோலை இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ராமநாதன் கே. பகவதி இயக்குகிறார்.
இரண்டில் ஒரு கதாபாத்திரமான ஹீரோயின் கேரக்டரில் நடித்திருப்பவர் சௌரா. இவர் WCC மாணவி. தியேட்டர் அனுபவம் உண்டு. முதல்படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரம்.
“எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். புத்தகங்கள் அலுக்கும்போது ஸ்க்ரிப்ட். திரும்பத் திரும்ப சலிக்காமல் ஸ்க்ரிப்டை வாசித்து உள் வாங்கிக் கொள்கிற அந்த டெடிகேஷன் அபாரம்.
தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஸ்க்ரிப்டில் உள்ள காட்சிகளை பயிற்சி செய்த பின்தான் படிப்பிடிப்புக்கே வந்தார். கொடைக்கானலில் உறையும் குளிரிலும் உற்சாகம் குறையாமல் நடித்திருக்கிறார்,” என்று ஹீரோயின் புகழ் பாடுகிறார் இயக்குனர் ராமநாதன் கே. பகவதி.
ஹீரோயினுக்கு அடுத்து இரண்டாவது கேரக்டரில், அதாவது ஹீரோ கேரக்டரில் இவரே நடிக்கிறார்.
இரண்டே பேர் நடிக்கும் படத்தில் இரண்டே இரண்டு இசைக்கருவிகளை வைத்து ஒரு பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள். கிடாரும், பியானோவும் ஒன்றையொன்று காதலிக்கும் பாரதியாரின் கண்ணம்மா பாட்டான “பாயும் ஒளி நீ எனக்கு….” பாடல்தான் அது.
விரைவில் படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.