இணைய உலகில் பிரபலமானவரான கேபிள் சங்கர் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘தொட்டால் தொடரும்’.
இந்த படத்தில் கதாநாயகனாக “ஆச்சரியங்கள், சட்டம் ஒரு இருட்டறை” ஆகிய படங்களில் நடித்த தமன்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ‘சுண்டாட்டம், நேற்று இன்று’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அருந்ததி நடிக்கிறார். இவர்களுடன் ‘சுட்டகதை’ பாலாஜியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிக நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் பி.சி.சிவனின் இசையில் படத்திற்கான பாடல் பதிவு விறு விறுப்பாக நடந்து வருகிறது. “ஒண்டிப்புலி, மாத்தியோசி, புகைப்படம்” ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
லவ் திரில்லரை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்
தனது எப் சி எஸ் கிரியேசன்ஸ் சார்பாக ஐந்தாவது படமாக மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தொட்டால் தொடரும் படத்தினைத் தயாரிக்கிறார் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்.