விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘அங்குசம்’ இசை வெளியீடு

angusam audio launch_00026

மனுஸ்ரீ பிலிம்ஸ் இண்டெர் நேஷனல் பானுமதி யுவராஜ் மற்றும் மனுகண்ணன் தயாரித்து மனுகண்ணன் இயக்கியிருக்கும் ‘அங்குசம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த பாடல் வெளியீட்டு விழா வெறுமனே படத்தைப்பற்றிய சிலாகிப்பாக  இல்லாமல்,  வழக்கத்துக்கு  மாறாக, ஒரு விழிப்புணர்ச்சி விழாவாக நடந்தது என்றே சொல்லலாம்.

பொதுமக்களுக்கு  இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினைக் குறிப்பாக RTI என்று சொல்லப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தும் விழாவாக அவ்விழா நடைபெற்றது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பல ஊழல் பெருச்சாளிகளின் முகத்திரையைக் கிழித்துப் பொதுமக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியினை, அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்கிடையிலும்  ஏற்படுத்திக் கொண்டிருக்கும், அங்குசம் படத்தின் நிஜநாயகன் ஸ்ரீநிவாசனை அழைத்து கெளரவப்படுத்தியது அங்குசம் படத்தின் குழு.

இருபகுதிகளாக நடைபெற்ற அங்குசம் படப்பாடல்கள் வெளியீட்டின் ஒரு பகுதியாக  மூத்த வழக்குரைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசினார்கள்.

அடுத்தகட்டமாக பாடலாசிரியர் அண்ணாமலை மற்றும் திரவியம் எழுதி, ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான அங்குசம் படத்தின் பாடல்களும் முன்னோட்டக்காட்சியும் திரையிடப்பட்ட்து.

மூன்றாவது கட்டமாக நடந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அங்குசம் பட்த்தின் குறுந்தகட்டினை வெளியிட்த் திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீ நிவாசன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன் , இயக்குனர் மனோஜ்குமார், பட அதிபர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ஸ்கந்தா (அங்குசம் ஹீரோ), ஜெயதி சுகா (அங்குசம் ஹீரோயின்) ,ஹுதாஷா (கண்ணிவெடி ஹீரோயின்),  வர்ஷாஅஷ்வதி.R, கோமல் சர்மா, ஷெரீன் ஆகியோர் கலந்து கொணடனர்.

Read Previous

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரதேசி’

Read Next

தனுஷின் 25வது படம் ‘வேலையில்லா பட்டதாரி’